முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தங்களது அரசியல் கொள்கைகளை திணிக்க வேண்டாம் அரசியல் கட்சிகளிடம் கதிர் கோரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையில் இந்த நிகழ்வினை எவ்வாறு நினைகூருவது தொடர்ந்தும் அரசின் அடக்கு முறைக்கு அஞ்சி கடைப்பிடிப்பதா மாறாக நாங்கள் எழுச்சிகொண்ட மக்களாக நினைவுகூருவதா
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சாதாரண விடயமல்ல இந்த நாளை அனைவரும் ஒன்று திரண்டு தேசிய எழுச்சிநாளாக பிரகடனப்படுத்தி நினைவுகூரவேண்டும் என்று அரசியல் கட்சி சார்ந்தவர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.
மக்களின் கொள்ளைக்கு மாறாக ஒவ்வொரு அரசியல் கட்சி பிரமுகர்களும் கட்சி கொள்கைகளை இங்கு வந்து பிரகடனப்படுத்துவதும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதையும் நாங்கள் காண்கின்றோம்.
மக்கள் அசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தேசியத்தின் பெரும் சக்தியாக இந்த நாளினை நாங்கள் நினைவுகூரவேண்டும் தற்போதைய சூழ்நிலையில் மக்கள் எழுச்சி போராட்டம் பெரிய அளவில் நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் தமிழர்களின் உரிமைபோராட்டத்தின் பால் மரணித்த மக்களின் நினைவேந்தல் என்பது ஒரு தேசிய எழுச்சி போராட்டமாக மாற்றம் பெறவேண்டும்.
பல வலிகளை சுமந்து போராடிய எமது இனம் இன்று சாதாரண நிலமைக்குள் அரசியல் வாதிகளால் கொண்டு செல்லப்படுவதை நாங்கள் பார்க்கின்றோம் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் ஏற்படுத்திய மக்கள் போராட்டம் அது ஒரு உணவுக்கான போராட்டம் எங்கள் போராட்டம் வயிற்று பசியினையும் பார்க்காது அதனையும் தாண்டி உரிமைப்பசிக்கான போராட்டம்.
இரண்டு போராட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றது. எங்கள் போராட்டத்தினை தெற்கில்கலப்பதன் ஊடாக உரிமைக்கான போராட்டத்தினை மழுங்கடிக்கும் செயலாகத்தான் இருக்கும் இந்த அரசியல் வாதிகளுக்கு நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.
தமிழ்மக்களுக்கான தீர்வு வழங்கப்படவேண்டும்,போர்குற்ற விசாரணை செய்யப்படவேண்டும்,இசைப்பிரியாவின் புகைப்படத்தினையும் அங்கு வைத்துள்ளார்கள்.
இந்த போராட்டத்திற்கு தமிழர்களின் அனுசரணையினை கொண்டு செல்பவர்கள் அரசாங்கத்தின் முகவர்களாகத்தான் இருக்கமுடியம் இப்ப இருக்கும் சூழ்நிலையில் போராட்டத்தினை அடக்குவதற்கு அந்த போராட்டத்திற்கு பின்னால் பல சக்திகள் இருக்கின்றது
விடுதலைப்புலிகளின் தொடர்பு இருக்கின்றது டயஸ்போராவின் தொடர்பு இருக்கின்றது என்று பயங்கரவாத செயற்பாடு என்று சொல்லி போராட்டத்தினை அடக்குவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகின்றது இதற்கு சான்றாக இதனை உறுதிப்படுத்திக்கொண்டு எதிர்காலத்தில் இராணுவ பிரசன்னத்தினை நாட்டில் உருவாக்கி அதன் ஊடாக மக்கள் போராட்டங்களை இல்லாது ஒளித்து இராணுவ ஆட்சிமுறையினை நிறுவி அதன் ஊடாக ஆட்சியினை நிறுவலாம் என்று சிங்கள பேரினவாத சக்திகள் நினைக்கின்றன.
இவ்வாறு செயற்படுவது இலங்கை அரசின் எதிர்கால திட்டத்திற்கு சார்பாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கின்றோம் சிங்கள மக்களின் போராட்டமும் தமிழ்மக்களின் போராட்டமும் வேறு பட்டது
அந்தபோராட்டத்துடன் நாங்கள் இணைந்து போராட்டம் செய்வதற்கான சூழல் தற்போது இல்லை ஆட்சிமாற்றம் ஏற்படலாம் அல்லது இந்த அரசே தொடர்ந்து இருக்கலாம் சிங்கள மேலாதிக்க சக்தி சிங்கள பௌத்த தலைமைத்துவங்களில் மாற்றம் ஏற்படவேண்டும் அந்த மாற்றம் இன்னும் ஏற்படவில்லை அதற்கான சந்தர்ப்பமும் இல்லை எதிர்காலத்தில் அது நடக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை
பௌத்த பீடம் எடுக்கும் தீர்மானம்தான் இலங்கையின் ஆட்சியினை தீர்மானிக்கும் அவர்கள் தமிழ்மக்கள் தொடர்பாக என்ன முடிவினை எடுக்கப்போகிறார்கள் அதனை வெளிப்படையாக அறிவிக்கும் வரையும் நாங்கள் சிங்கள் மக்களின் போராட்டங்களை அங்கிகரிக்கவேண்டிய தேவை இல்லை இந்த விடையங்களின் மக்கள் தெளிவாக புரிந்து கொண்டு செயற்படவேண்டும்
இந்த கொதி நிலையினை சிங்கள அரசாங்கமும் சரி சிங்கள மக்களுகம் சரி தமக்கு சார்பாக தமிழர்களை பயன்படுத்துவார்களாக இருந்தால் எதிர்காலத்தில் வரப்போகும் சிங்கள ஆட்சியாளர்கள் இதனைவிட மோசமாகவும் இருக்கலாம் அல்லது இவர்களாகவும் இருக்கலாம்
எங்கள் அரசியல் தலைவர்கள் சிலர் இதனை எமக்கு சாதகமான விடையமாக மக்கள் மத்தியில் சித்தரித்துவருகின்றார்கள் அவர்கள் தெளிவாக முடிவெடுக்கவேண்டும் இது தவறான விடையம் என்றார்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தங்களது அரசியல் கொள்கைகளை திணிக்க வேண்டாம் அரசியல் கட்சிகளிடம் கதிர் கோரிக்கை
Reviewed by Author
on
May 04, 2022
Rating:

No comments:
Post a Comment