அண்மைய செய்திகள்

recent
-

மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் பழைய மாணவர் சங்க அலுவலகம் திறந்து வைப்பு

மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியானது(1959/05/14) அன்று ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் தனது 63ஆவது ஆண்டு அகவைதினத்தினை முன்னிட்டு பாடசாலையின் பழைய மாணவர் சங்க அலுவலகம் பாடசாலையில் இன்று (2022/05/14) பாடசாலையின் அதிபர் திரு. பாலபவான் அவர்களும், பழையமானவர் சங்க செயளாலர் திரு.வினோதன் அவர்களும், பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயளாலர் திரு.செல்வக்குமார் அவர்களும் இணைந்து வைபவரீதியாக திறந்துவைத்தனர்.

 அத்தோடு பழையமாணவர்களினால் பாடசாலையின் வளாகம் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து சிரமதானத்திற்கு வருகைதந்த அனைத்து பழையமாணவர்களுக்கு மதிய விருந்துபசாரம் வழங்கப்பட்டு சிறிய கலந்துரையாடலும் மேற்கொள்ளப்பட்டது.

 மாலைவேலையில் சில மகிழ்ச்சிகரமான பழையநினைவுகளை நினைவூட்டக்கூடிய விளையாட்டுக்களும் மேற்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியாக இந்நிகழ்வு இனிதே நிறைவடைந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து பழையமாணவர்களுக்கும், அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கும், பாடசாலையின் அதிபருக்கும், அசிரியர்களுக்கும் பழையமாணவர் சங்கத்தின் நன்றிகளை தெரிவித்தனர் 









மன்/சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் பழைய மாணவர் சங்க அலுவலகம் திறந்து வைப்பு Reviewed by Author on May 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.