மலசலகூட குழியில் இருந்து குழந்தையின் சடலம் மீட்பு!
இதன்போது குழந்தையின் தாய் வீட்டில் சமைத்துக்கொண்டிருந்ததாக நிலையில் குழந்தை இல்லாததால் குழந்தையின் தந்தையுடன் இணைந்து தேடியுள்ளார்.
இதன்போது, வீட்டின் களஞ்சிய அறையில் உள்ள மலசல கூட குழியில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
அதன்போது அயலவர்களின் உதவியுடன் குழந்தையை மீட்டு முச்சக்கர வண்டியில் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 அடிக்கு மேல் ஆழம் கொண்ட மலசலகூட குழியின் மேற்பரப்பை சிறிய தகரத் துண்டு மற்றும் அட்டைப்பெட்டியால் மூடியிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குழந்தையின் மரணம் தொடர்பில் குடியிருப்பாளர்கள் தெரிவித்த கருத்துக்கள் முரண்பாடாக உள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மலசலகூட குழியில் இருந்து குழந்தையின் சடலம் மீட்பு!
Reviewed by Author
on
June 18, 2022
Rating:

No comments:
Post a Comment