அண்மைய செய்திகள்

recent
-

தீவிரமெடுக்கும் எபோலா வைரஸ் பரவல் ; உலக அவசரநிலை பிரகடனம்

 மத்திய கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடு ​கொங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட எபோலா தொற்று பரவல் காரணமாக கொங்கோவில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர்.


தற்போது மீண்டும் எபோலா வைரஸ் கொங்கோவில் வேகமாக பரவிவருகிறது. தற்போது எபோலா வைரஸ் பாதிப்பால் அங்கு இதுவரை 88 பேர் உயிரிழந்தனர்.



உலக சுகாதார அவசர நிலை

வைரஸ் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்டை நாடுகளான உகண்டா, தென் சூடான் போன்ற நாடுகளுக்கும் எபோலா வைரஸ் பரவும் என அஞ்சப்படுகிறது.


இந்நிலையில், கொங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் உலக சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் வெளியிட்ட எக்ஸ் வலைதளத்தில், எபோலா வைரஸ் காரணமாக உலக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது.


நாடுகள் சர்வதேச எல்லைகளை மூட அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.












தீவிரமெடுக்கும் எபோலா வைரஸ் பரவல் ; உலக அவசரநிலை பிரகடனம் Reviewed by Vijithan on May 17, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.