அண்மைய செய்திகள்

recent
-

அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்புகள் கடந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் இதனால் எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு கையிருப்பு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களே கையிருப்பில் மிஞ்சி உள்ளதாகவும் இதனால் உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தைகளுக்கு எந்த விதமான ஸ்திரத்தன்மையையும் காணப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட அண்மைய தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் ஆயிரத்து 812 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் மே மாதத்தில் ஆயிரத்து 920 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது. 

இதன் பகுதிகளில் ஒன்றான வெளிநாட்டு நாணய இருப்புக்கள், ஏப்ரல் மாதத்தில் ஆயிரத்து 602 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டதுடன் மே மாதத்தில் ஆயிரத்து 805 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஏனைய உறுப்பு பகுதிகளான சிறப்பு வரைதல் உரிமைகள் 115 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 21 மில்லியன் அமெரிக்க டொலராக சரிவடைந்துள்ளது. அதே நேரத்தில் தங்க கையிருப்பு 28 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது . இரண்டு மாதங்களுக்கு இடையில் 29 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது. வெளிநாட்டு கையிருப்பு விகிதம் மே 13 முதல் இந்த வாரம் வரையில் அதிகரித்துள்ளதை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

 மேலும் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணம், டொலர்களை மாறியதில் இருந்து பெறப்பட்ட வருமானம், திறந்த கணக்குகள் மீதான கட்டுப்பாட்டு வழிகாட்டுதல் மூலம் பெறப்பட்ட வருமானம் மூலமம் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும் பொதுமக்கள் வரிசையில் நிற்காமல் தமது அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள மேலதிகமாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு வருமானங்கள் இன்னும் தேவைப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு Reviewed by Author on June 10, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.