சிறப்புற இடம் பெற்ற ஞான வைரவர் ஆலய சங்காபிஷேகம்
ஆலயம் புணரமைக்கப்பட்டு 01.06.2022 அன்று ஆலயத்தில் கிரிகைகள் ஆரம்பமாகி 02.06.2022 அன்று எண்ணெய்க்காப்பு இடம்பெற்று 03.06.2022 அன்று புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
கு ம் பாபிஷேகத்தை தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிசேகம் இடம்பெற்று 14.06.2022 இன்று சங்காபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது
சிவகுகக்குருக்கள்,சிவகுகநாதக்குருக்கள்,ஆகிய சிவாச்சாரியர்களினால் சங்காபிஷேகம் சிறப்பாக இடம் பெற்றது அதனைத் தொடர்ந்து வைரவப் பெருமானுக்கு விசேட பூசைகள் நடைபெற்று எம்பெருமான் உள்வீதி வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்
சிறப்புற இடம் பெற்ற ஞான வைரவர் ஆலய சங்காபிஷேகம்
Reviewed by Author
on
June 14, 2022
Rating:

No comments:
Post a Comment