அண்மைய செய்திகள்

recent
-

நடுவானில் மோதவிருந்த விமானங்கள் - இலங்கை விமானியின் சாதுரியத்தினால் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து!

லண்டனில் இருந்து கொழும்புக்கு பயணத்தை மேற்கொண்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யு.எல் 504 என்ற விமானம் நேற்று பாரிய விபத்திலிருந்து தப்பியமை தொடர்பில் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விமானம், 275 பயணிகளுடன் லண்டனிலிருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது. சுமார் 33,000 அடி உயரத்தில் குறித்த பறந்துகொண்டிருந்தபோது, பிரிட்டிஷ் ஏர்வேய்ஸூக்கு சொந்தமான விமானம் ஒன்று 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. துருக்கி வான்வெளியில் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் 33,000 அடியில் இருந்து 35,000 அடி உயரத்திற்கு பயணிக்குமாறு துருக்கி - அங்காரா விமானக் கட்டுப்பாடு அறையில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது.

 விழிப்புடன் இருந்த இலங்கை விமானி, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமொன்று 35,000 அடி உயரத்தில் தமது விமானத்திலிருந்து 15 மைல் தொலைவில் பயணிப்பதை கண்டறிந்து, அங்காராவில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கினார். யு.எல் 504 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் குறித்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானம் புறப்பட்டிருந்தது.

 இந்நிலையில், ஸ்ரீலங்கன் விமானி வழங்கிய தகவலை சரிபார்த்த போது, அங்காரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை, யு.எல் விமானியிடம் 35,000 அடி உயரத்தில் எந்த விமானத்தையும் தாங்கள் ரேடாரில் கண்டறியவில்லை என்று தெரிவித்ததுடன், ஸ்ரீலங்கன் விமானம் மேல் நோக்கி பயணிக்க பணிக்கப்பட்டது. எனினும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தை தமது விமானத்தின் ரேடாரில் கண்டறிந்த ஸ்ரீலங்கன் விமானி, மீண்டும் அங்காரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பிரிவினருக்கு தகவல் கொடுத்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் விமானத்தை ரேடாரில் கண்டறிந்த கட்டுப்பாட்டு பிரிவு, ஸ்ரீலங்கன் விமானத்தை மேலே பயணிக்க வேண்டாம் என்று அவசரமாக பணித்தது.

 ஸ்ரீலங்கன் விமானம் பணிக்கப்பட்ட உயரத்தில் பயணித்திருந்தால், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானத்துடன் மோதி பாரிய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யு.எல் 504 விமானத்தில் இருந்த 275 பயணிகள், அதன் பணியாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் அதன் பணியாளர்களின் உயிர்கள், யு.எல் விமானத்தின் தலைமை விமானியின் விழிப்புணர்வு மற்றும் சாதுரியம் காரணமாக காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடுவானில் மோதவிருந்த விமானங்கள் - இலங்கை விமானியின் சாதுரியத்தினால் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து! Reviewed by Author on June 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.