எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இனிமேல் டோக்கன் முறை இல்லை – எரிசக்தி அமைச்சர்
பொதுமக்கள் வரிசையில் நிற்பதில் இருந்து விடுவிப்பதற்காகவும் ஜூலை 11 அல்லது 15ஆம் திகதிகளில் எரிபொருள் கிடைத்தவுடன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் செல்லுமாறு அவர்களுக்குத் தெரிவிக்கவும் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டதென்றும் சில நாட்களுக்கு மட்டுமே இந்த முறை தொடங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அதன்பின்னர் அது தற்போது வியாபாரமாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் வழங்கும் முறையானது எரிசக்தி அமைச்சின் தலையீடு இன்றி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இனிமேல் டோக்கன் முறை இல்லை – எரிசக்தி அமைச்சர்
Reviewed by Author
on
July 04, 2022
Rating:

No comments:
Post a Comment