யாழ்ப்பாணத்தில் இ.போ.ச.-தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பு; பயணிகள் பாதிப்பு
மேலும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னும் எரிபொருளைப் பெறுவது தோல்வியில் முடிந்துள்ளது.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் இ.போ.ச கல்கமுவ சாலை ஊழியர்களினால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை ஊழியர்கள் நேற்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
எனினும் தாக்குதலை நடாத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே இன்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஏனைய சாலை மற்றும் வெளிமாவட்ட பஸ்கள் எதுவும் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்குள் நுழையாதவாறு வாயிலில் தடை போடப்பட்டுள்ளது.
இதேவேளை பேருந்து சேவைகள் இன்மையால் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் வைத்தியசாலைக்கு கிளினிக் செல்லும் நோயாளர்கள் என பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது எரிபொருள் நெருக்கடியால் பேருந்துகளிலேயே பலர் பயணிக்கும் நிலையில் இத்தகைய பணிப் புறக்கணிப்பு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இ.போ.ச.-தனியார் பேருந்துகள் சேவை புறக்கணிப்பு; பயணிகள் பாதிப்பு
Reviewed by Author
on
July 25, 2022
Rating:
Reviewed by Author
on
July 25, 2022
Rating:


No comments:
Post a Comment