ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைக்காவிடின் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை என்ன - சபாநாயகர் கருத்து
இதுவரை ஜனாதிபதி தமது இராஜினாமா கடிதத்தை கையளிக்காத காரணத்தினால், நாளைய தினம்(15) பாராளுமன்றத்தை கூட்டுவதிலும் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாக பாராளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை, சிங்கப்பூருக்கு சென்றதன் பின்னர் ஜனாதிபதி தமது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பார் என அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை நேற்று(13) தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி இன்னமும் மாலைதீவுகளில் தங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைக்காவிடின் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை என்ன - சபாநாயகர் கருத்து
Reviewed by Author
on
July 14, 2022
Rating:
Reviewed by Author
on
July 14, 2022
Rating:


No comments:
Post a Comment