அண்மைய செய்திகள்

recent
-

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000 ஐ தாண்டியது

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவி வரும் அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000 ஐத் தாண்டியுள்ளது என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

 

அதன்படி, 1,574 குடும்பங்களைச் சேர்ந்த 5,242 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அவர்களில் 162 பேர் தற்போது 05 பாதுகாப்பான மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

சீரற்ற வானிலை காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த 65 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், 192 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை, அனர்த்தங்கள் காரணமாக 2 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவிவித்துள்ளது.





அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000 ஐ தாண்டியது Reviewed by Vijithan on May 16, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.