”இலங்கையில் எங்களுக்கு நடந்ததை மறக்க முடியாது” - அனுபவம் பகிர்ந்த நடிகை ஆத்மிகா
நிகழ்வில் நடிகை ஆத்மிகா பேசுகையில், “திரைத்துறையில் அறிமுகமான பிறகு இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். ஸ்டுடியோ கிரீன் பேனரில் நடிப்பது என்பது எல்லா நடிகர்களின் ஆசையாக இருக்கும். பேய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. இயக்குநர் டீகே இயக்கத்தில் வெளியான ‘யாமிருக்க பயமேன்’ படத்தை திரையரங்குகளில் பார்த்து, விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அவரது இயக்கத்தில், அதிலும் பேய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். பேயை வைத்து பயமுறுத்தாமல் சிரிக்க வைத்தவர் இயக்குநர் டீகே. அதனால் அவரது இயக்கத்தில் ‘காட்டேரி’ படத்தில் நடித்ததை சந்தோசமாக நினைக்கிறேன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது என்னை பற்றி இயக்குநர் பெருமிதமாக பேட்டி அளித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். சினிமா மீது இயக்குநர் டீகேவுக்கு இருக்கும் காதல் அலாதியானது. இலங்கையில் படப்பிடிப்பு நடந்தபோது ஒவ்வொரு நாளும் திட்டமிட்டபடி எதுவும் நடைபெறாது. ஏனெனில் பருவநிலை அப்படி. அதனால் அங்கு நடைபெற்ற படப்பிடிப்பு அனுபவம் மறக்க இயலாது'' எனத் தெரிவித்தார்.
”இலங்கையில் எங்களுக்கு நடந்ததை மறக்க முடியாது” - அனுபவம் பகிர்ந்த நடிகை ஆத்மிகா
Reviewed by Author
on
July 27, 2022
Rating:

No comments:
Post a Comment