அண்மைய செய்திகள்

recent
-

நீர்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்தேகத்திலிருந்து இன்று (22) மாலை பாடசாலை மாணவியின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர். நீர்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதைக் கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் லிந்துலை பெயார்பீல்ட் (மிளகுசேனை) தோட்டத்தைச் சேர்ந்த 19 வயதுடைய முத்துரட்ணம் ஜீலோஜினி என்ற லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

 இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இன்று (22) காலை தனியார் வகுப்புக்காக தலவாக்கலை நகரத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வந்ததாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இவர் இந்த வருடம் இடம்பெறவுள்ள க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவி என பொலிஸாரால் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. எனினும், குறித்த மாணவியின் மரணம் தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நுவரெலியா நீதிமன்ற நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


நீர்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு Reviewed by Author on July 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.