விவசாயிகளுக்கு பல சலுகைகளை வழங்குவதாக விவசாய அமைச்சர் உறுதி
எதிர்வரும் நெல் அறுவடைக் காலத்திற்கு மாத்திரமன்றி எதிர்வரும் பயிர்ச்செய்கைக் காலத்திலும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெரும் போகத்தில் நெல்லுக்கு அதிக விலை கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நெல் சந்தைப்படுத்தல் சபை அடுத்த வாரம் முதல் நெல் கொள்வனவுகளை ஆரம்பிக்கும்.
நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்வனவுகளை ஆரம்பிக்கும் போது, தனியார் துறையினர் அதிக விலை கொடுப்பார்கள் என எதிர்பார்த்துள்ளதாக விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு பல சலுகைகளை வழங்குவதாக விவசாய அமைச்சர் உறுதி
Reviewed by Author
on
August 06, 2022
Rating:

No comments:
Post a Comment