அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஸ்ரீலேகா பேரின்ப குமாரின் 'கோவர்த்தனம்' நாவல் வெளியீடு.

மன்னார் மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்ரீலேகா பேரின்ப குமார் அவர்களின் 'கோவர்த்தனம்' நாவல் நானாட்டான் சிவராசா இந்து வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(28) மாலை வைபவ ரீதியாக வெளியீடு செய்யப்பட்டது. மன்னார் புனித தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் எஸ்.இ.ரெஜினோல்ட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக அருட்திரு.தமிழ் நேசன் அடிகளார், நானாட்டான் பிரதேச செயலாளர் மா.ஸ்ரீஸ்கந்த குமார் , சிறப்பு விருந்தினராக நானாட்டான் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ரி.ஜெகநாதன் , கௌரவ விருந்தினர்களாக சிவராசா இந்து வித்தியாலய அதிபர் அமலதாசன், எஸ்.ஆசைப்பிள்ளை கலந்து கொண்டார்கள் 

 யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட நூலாசிரியர் ஸ்ரீலேகா பேரின்பகுமார் அவர்கள் நீண்ட காலம் மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாக பணிபுரிந்தவர். மன்னார் பெருநிலப் பரப்புப் பிரதேசங்களில் விவசாயத்திற்கு இணையாக கால்நடைகள் வளர்க்கப் படுவதுண்டு. அவ்வாறு வளர்க்கப்படும் கால்நடைகளை மேய்ச்சலுக்காக ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பதில் உள்ள பிரச்சனைகள் , இதனால் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் துன்பங்களை எடுத்துக் கூறும் வகையில் இந்த நாவல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள். ஆசிரியை ஸ்ரீலேகா பேரின்ப குமார் அவர்களின் எட்டாவது இலக்கியப் படைப்பு 'கோவர்த்தனம்' நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.









மன்னாரில் ஸ்ரீலேகா பேரின்ப குமாரின் 'கோவர்த்தனம்' நாவல் வெளியீடு. Reviewed by Author on August 29, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.