அண்மைய செய்திகள்

recent
-

சீரற்ற வானிலை – விமானப்படை தயார் நிலையில் !

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் ஏற்படக் கூடிய அவசர நிலைமைக்கு முகம் கொடுப்பதற்காக இலங்கை விமானப்படை தயார் நிலையில் உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய, இலங்கைக்கு அண்மித்த வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக இலங்கையின் பல பாகங்களிலும் கன மழை பெய்யவுள்ளதுடன், மண்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

 எனவே ஏற்படக் கூடிய இயற்கை அனர்த்தங்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு விமானப்படையினர் தயார் நிலையில் இருப்பதாக விமான படைத்தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன தெரிவித்துள்ளார். மேலும் அனர்த்த நிலைமைகள் குறித்து, விமானப்படையின் விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அனர்த்தங்கள் ஏற்படும் போது, மக்களை மீட்பதற்கும் நிவாரணங்களை வழங்கவும் விமானப்படையினர் ஹெலிகொப்டர்கள், சிறப்பு பயிற்சிப் பெற்ற விமானப்படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.



சீரற்ற வானிலை – விமானப்படை தயார் நிலையில் ! Reviewed by Author on August 31, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.