மன்னார் நகரசபைக்கு பல வருடங்களாக வாடகை செலுத்தாத அரச போக்குவரத்து சேவையினால் பல லட்சம் வருமானம் இழப்பு
இந்த நிலையில் தனியார் பேரூந்து சேவையினர் இரண்டு வருடங்களாக உரிய காலப்பகுதியில் நகரசபைக்கு வாடகை கட்டணத்தை செலுத்தி வருகின்ற நிலையில் அரச பேரூந்து சேவையினர் மாத்திரம் இரண்டு வருடங்களாக எந்த ஒரு கட்டணமும் செலுத்தவில்லை என்பதுடன் முன்னைய நாட்களில் செலுத்த வேண்டிய பணத்தையும் செலுத்தவில்லை
குறித்த கட்டணத்தை செலுத்துவது தொடர்பாக பலமுறை மன்னார் பேரூந்து சாலைக்கு கடிதங்கள் நகரசபையால் அனுப்பப்பட்ட போதிலும் கட்டண நிர்ணயத்தை மீள்பரிசீலிப்பது தொடர்பாக கலந்துரையாடலுக்கு மன்னார் அரச போக்குவரத்து சபையை அழைத்தும் அவர்கள் அழைப்பையும் கட்டணம் செலுத்துவதையும் உதாசீனப்படுத்தி வருகின்றனர்
இந்த நிலையில் கடந்த மன்னார் நகரசபை அமர்வில் உரிய வாடகை பணத்தை செலுத்த மன்னார் அரச பேரூந்து சேவையினர் தவறினால் நகரசபை பேரூந்து நிலையத்தில் அவர்கள் சேவையை தொடர்வதற்கான அனுமதி மறுக்கப்படுவதற்கான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுடன்
இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் அனைத்து போக்குவரத்து இடையூறுகளுக்கும் மன்னார் அரச போக்குவரத்து சேவையினரே பொறுப்பு ஏற்க வேண்டும் என மன்னார் நகர சபையினர் தெரிவித்துள்ளனர்
மன்னார் நகரசபைக்கு பல வருடங்களாக வாடகை செலுத்தாத அரச போக்குவரத்து சேவையினால் பல லட்சம் வருமானம் இழப்பு
Reviewed by Author
on
August 12, 2022
Rating:
Reviewed by Author
on
August 12, 2022
Rating:



No comments:
Post a Comment