காற்றாலை விடயத்தில் நாங்கள் மன்னார் மக்களின் பக்கமே நிற்போம் -பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்
காற்றாலை திட்டத்தின் விரிவுபடுத்தலுக்கு எதிராக மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக பல போராட்டங்கள் இடம் பெற்றுவருகின்ற நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தானிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
நாங்கள் தொடர்ச்சியாக நான் மாத்திரமல்ல இங்குள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் நடக்கின்ற அதி உயர் கூட்டங்களில் இந்த காற்றாலை பிரச்சனை தொடர்பாக தெரிவித்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் எங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது
இந்த காற்றாலை அமைக்கப்படுவதனால் இப்பொழுதும் எதிர்காலத்திலும் பெரிய பாதிப்பு இல்லை என சொல்லப்படுகிறது
ஆனால் மக்கள் தொடர்ச்சியாக இதற்கு எதிராக போராடிக்கொண்டு இருக்கிறார்கள் அதற்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள் வரும் வாரத்தில் கூட பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக நான் அறிகிறேன் அதை எல்லாம் நாங்கள் உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம் அதே நேரம் மக்களுடைய நிலைப்பாட்டையும் உயர் மட்டத்துக்கு வெளிப்படுத்துகின்றோம் அதோடு காற்றாலை விடயத்தில் நாங்கள் மக்களுடன் இருப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்
காற்றாலை விடயத்தில் நாங்கள் மன்னார் மக்களின் பக்கமே நிற்போம் -பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்
Reviewed by Author
on
August 28, 2022
Rating:
Reviewed by Author
on
August 28, 2022
Rating:


No comments:
Post a Comment