விநாயகர் சதுர்த்தி விரதம் இன்று
விநாயகர் தனது தும்பிக்கையால் அனலாசூரனைப் பிடித்து வாயில் போட்டு விழுங்கினார். இதனால் ஏற்பட்ட வெப்பம் தாங்க முடியாமல் உயிர்கள் தவித்தன.
முனிவர்கள் இருபத்தொரு அறுகம்புல்லை ஒன்றாகக் கட்டி விநாயகரது உடலில் தடவ வெப்பம் தணிந்தது. அன்று தொடக்கம் அறுகம்புல் விநாயகருக்கு உகந்த பொருள் என்று கூறப்படுகின்றது. அதே போல் விநாயகருக்கு 21 நிவேதனப் பொருட்கள் வைத்து வழிபடும் முறையும் வழக்கத்திற்கு வந்தது.
பிரம்மாவின் மகனான தட்சன் உமையம்மை தனது மகளாக பிறக்க வேண்டும் என தவம் செய்தான்.
இதன் பயனாக பார்வதி தாட்சாயினி என்னும் பெயரில் தட்சனுக்கு மகளாகப் பிறந்தாள்.
பின் சிவபெருமானுக்கு தாட்சா யினியை திருமணம் செய்து கொடுத்தான். அதன் பின் தட்சன் பெரிய யாகம் செய்தான், அந்த யாகத்திற்கு பிரம்மா விஷ்ணு தேவேந்திரன் முதலியோர் வந்திருந்தார்கள். ஆனால் சிவனுக்கும் பார்வதிக்கும் அழைப்பு விடுக்கவில்லை.
அழையாதவர்கள் யாகத்திற்குப் போக வேண்டாம் என சிவபெருமான் தாட்சாயினியை தடுத்தார். தாட்சாயினி அதை மீறிச் சென்று அவமானப்பட்டு யாகசாலை சுடுகாடாக மாறட்டும் என சபித்துவிட்டுத் திரும்பினாள். சிவபெருமானிடம் வந்து பாதத்தில் வீழ்ந்து பணிந்தாள். சிவபெருமான் மன்னித்துக் கொண்டார்.
சிவபெருமான் கடுங் கோபங் கொண்டு வீரபத்திரரை அழைத்து தட்சனது யாகத்தை அழிக்கும்படி ஆணையிட்டார். வீரபத்திரர் தட்சனின் தலையை வெட்டி யாகசாலையை அழித்தார். இருந்தாலும் தந்தையின் மீது கொண்ட பாசத்தால் தக்கனின் வெட்டப்பட்ட தலைக்குப் பதிலாக ஆட்டுத் தலையைப் பொருத்தி தக்கனும் உயிர் கொடுத்தாள்.
தக்கனால் வளர்க்கப்பட்ட இந்த உடம்பு தேவையில்லை என யாகத்தீயில் விழுந்து தன்னை மாய்த்துக் கொண்டாள். மீண்டும் பர்வத ராஜனுக்கு மகளாகப் பிறந்த தட்சாயினி சிவபெருமானை கணவனாக அடைய ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதியில் விரதம் இருந்து சிவபெருமானை கணவனாக அடைந்தாள்.
அன்றிலிருந்து இவ்விரதம் இந்துக்களுக்கு முக்கிய விரதமாக கைக்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையை விட இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
விரத முறை
விரதத்திற்கு முதல் நாள் வீட்டைச் சுத்தப்படுத்தி விரத நாளில் காலையில் எழுந்து நீராடி நிறைகுடம் வைத்து களி மண்ணில் அல்லது சந்தணத்தில் பிள்ளையார் செய்து வைத்து அன்று முழுநாளும் உபவாசம் இருந்து விநாயகர் கவசம் விநாயகர் துதிப் பாடல்களைப் பாடி கற்பூர ஆராத்தி செய்ய வேண்டும்.
அடுத்த நாள் காலையில் விநாயகருக்குரிய 21 நிவேதனப் பொருட்களையும் படைத்து கற்பூர தீபங் காட்டி முதல் நாள் செய்து வழிபட்ட பிள்ளையாரை ஆற்றிலோ கடலிலோ கொண்டு போய் விட்டு வந்து பாரணம் செய்து விரதம் முடிப்பார்கள்.
சிலர் வீட்டிலும் பலர் ஆலயங்களிலும் விரதம் அனுட்டிப் பார்கள்.இவ்விரதம் அனுட்டிப்பதனால் புத்திர பாக்கியம் செல்வம் முதலியன கிடைப்பதோடு நினைத்த காரியங்களும் நிறைவேறும் என்று கூறப்படுகின்றது.
விநாயகர் சதுர்த்தி விரதம் இன்று
Reviewed by Author
on
August 31, 2022
Rating:

No comments:
Post a Comment