மண்சரிவினால் 3,194 குடும்பங்கள் பாதிப்பு
நுவரெலியா A7 பிரதான வீதியில் இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா நகரினை அண்மித்த பகுதியில் மண்சரிவு பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக நுவரெலியா – தலவாக்கலை, நுவரெலியா – ஹட்டன் , நுவரெலியா – டயகமவிற்கான போக்குவரத்து சுமார் 2 மணித்தியாலங்களுக்கு ஸ்தம்பிதமடைந்திருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
நுவரெலியா வீதி அதிகார சபை ஊழியர்களும் பொலிஸாரும் இணைந்து மண்மேட்டை அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, பலத்த காற்றுடன் கூடிய மழையுடனான வானிலையினால் மாத்தளை – பலகடுவ பகுதியில் A9 பிரதான வீதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இந்த மரம் இன்று அதிகாலை முறிந்து வீழ்ந்துள்ளதால், குறித்த வீதியூடாக ஒருவழி போக்குவரத்து மாத்திரமே முன்னெடுக்கப்பட்டது.
நிலவும் மழையுடனான வானிலையினால் நுவரெலியா, ஹட்டன், கொத்மலை கல்வி வலயங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மத்திய மாகாண ஆளுநர் இன்று விடுமுறை அறிவித்திருந்தார்.
நுவரெலியா கல்வி வலயத்தின் பாடசாலைகள் இன்று மூடப்பட்டிருந்தன.
எனினும், வலப்பனை, ஹங்குராங்கெத்த கல்வி வலயங்களில் இன்று கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மண்சரிவினால் 3,194 குடும்பங்கள் பாதிப்பு
Reviewed by Author
on
August 05, 2022
Rating:

No comments:
Post a Comment