அண்மைய செய்திகள்

recent
-

நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு யாழ்ப்பாண பொலிஸாரின் விசேட அறிவிப்பு!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. மகோற்சவத்தின் போது பெருமளவில் பக்தர்கள் ஒன்று கூடுவது வழமை எனவே நல்லூர் ஆலயவளாகத்தில் திருடர்கள் தமது கைவரிசியினை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றது. அதனை தடுக்க கூடியவாறு யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிபுரையின் கீழ் விசேட பொலிஸ் அணிகள் சிவில் மற்றும் சீருடையில் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

 எனினும் நல்லூர் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் பெறுமதியான நகைகளை அணிந்து வருவதை தவிர்ப்பதோடு அதிகளவில் பணத்தினை ஆலயத்திற்கு எடுத்து வருவதை தவிர்க்குமாறும் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தமது வீடுகளை சரியாக பூட்டி வீட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி ஆலயத்திற்கு வரும் பட்சத்தில் திருட்டு சம்பவங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என யாழ்ப்பாண பொலிசார் அறிவித்துள்ளனர்.

   


நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு யாழ்ப்பாண பொலிஸாரின் விசேட அறிவிப்பு! Reviewed by Author on August 03, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.