ரி-20 உலகக்கிண்ணம்: இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு!
அத்துடன், உலகக்கிண்ண அணியில் இடம்பிடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரராக துனித் வெல்லாலகே அணியில் இடம்பெறவில்லை.
மேலும், துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெனார்டோ உபாதையில் இருந்து இன்னமும் முழுமையாக மீளாத காரணத்தால் அவரும் அணியில் இடம்பெறவில்லை.
வேகப்பந்து வீச்சாளர்களான துஸ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் உடற்தகுதி பொறுத்து அணியில் இடம்பிடிப்பார்கள்.
தசுன் சானக தலைமையிலான அணியில், தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, பானுக ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க, மகேஷ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, சமிக்க கருணாரத்ன, துஸ்மந்த சமீர, லஹிரு குமார, தில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலதிக வீரர்களாக, அஷேன் பண்டார, பிரவீன் ஜெயவிக்ரம, தினேஷ் சந்திமால், பினுர பெணார்டோ, நுவனிந்து பெனார்டோ ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
ரி-20 உலகக்கிண்ணம்: இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு!
Reviewed by Author
on
September 17, 2022
Rating:

No comments:
Post a Comment