அண்மைய செய்திகள்

recent
-

செல்வச்சந்நிதி ஆலயத் தேர்த்திருவிழாவில் 70 பவுண் நகைகள் திருட்டு

வரலாற்று சிறப்பு மிக்க செல்வச் சந்நிதி ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்றவர்களிடம் சுமார் 70 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தங்க நகைகளைப் பறிகொடுத்த 18 பேர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய தேர்த திருவிழா நேற்று (09-09-2022) இடம்பெற்றது. 

 பல்லாயிரக் கணக்கான அடியவர்கள் பங்கேற்று தமது நேரத்திக் கடன்களை நிறைவேற்றினர். தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் திருடர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனார். தங்க நகைகளைப் பறிகொடுத்த 18 பேர் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 70 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர். இன்று ஆலயத்தின் தீர்த்தத் திருவிழா என்பதனால் அதிகளவான அடியவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செல்வச்சந்நிதி ஆலயத் தேர்த்திருவிழாவில் 70 பவுண் நகைகள் திருட்டு Reviewed by Author on September 10, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.