அண்மைய செய்திகள்

recent
-

ஈஸ்ட் லைட் நிறுவனத்தினால் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பை தளமாககொண்டு இயங்கிவரும் பிரபல சமூகசேவை தொண்டு நிறுவனமான ஈஸ்ட் லைட் (EAST LIGHT) நிறுவனத்தினால் விசேட தேவையுடையோருக்கான பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்சியாக, கிரான் பிரதேசத்தில் வசிக்கும் தயாபரன் சனோஜன் என்னும் விசேட தேவையுடைய பிள்ளைக்கு சக்கர நாற்காலியொன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கிரான் பிரதேச செயலாளர் ராஜ்பாபு கலந்துகொண்டு குறித்த பிள்ளைக்கு சக்கர நாற்காலியை வழங்கிவைத்தார்.

loc இதில் கலந்துகொண்ட ஈஸ்ட் லைட் (EAST LIGHT) தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபர் க.ரவிகிருஸ்ணா கருத்து தெரிவித்தபோது, இன்று வழங்கப்பட்ட சக்கர நாற்காலிக்கான நிதியுதவி சுவிஸ் நாட்டில் வதியும் ஆறுமுகம் அன்பழகன் அவர்களால் வழங்கப்பட்டதாகவும், அதற்காக தமது நிறுவனத்தின் சார்பாகவும் பயனாளி சார்பாகவும் நன்றியை தெரிவிப்பதாக கூறினார். அத்தோடு விசேட தேவையுடையவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரி அல்லது தொலைபேசி இலக்கம் ஊடாக தமது நிறுவனத்தை தொடர்புகொண்டு கோரிக்கைகளை முன்வைக்கலாமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.




ஈஸ்ட் லைட் நிறுவனத்தினால் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு Reviewed by Author on September 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.