பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல்நிலை கவலைக்கிடம்
இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக ராணியில் உடல் நிலை ஆரோக்கியமாக இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணியின் உடல் நிலை மோசமாகி வருவதால், அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணியின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து, அவரது நான்கு பிள்ளைகளும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்திருப்பதாகவும், இதுகுறித்து நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் அளித்திருப்பதாகவும் லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் ட்விட்டர் பக்கத்தில், “இந்த நேரத்தில் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வரும் செய்தியால் நாடு முழுவதும் ஆழ்ந்த கவலையில் உள்ளது. எனது எண்ணங்கள், நாட்டு மக்களின் எண்ணங்கள் அனைத்தும் அரச குடும்பத்துடன் துணை நிற்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல்நிலை கவலைக்கிடம்
Reviewed by Author
on
September 08, 2022
Rating:

No comments:
Post a Comment