கறிற்றாஸ்-வாழ்வுதயத்தின் சர்வமத செயற்றிட்டத்தின் கீழ் மரநடுகை ஆரம்பித்து வைப்பு.
இந்த இயற்கை ஊடாகவே கடவுள் மனித குலத்திற்கு பல நன்மைகளை வழங்குகின்றார்.
தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின்' தாக்கத்திற்கு மிக முக்கிய காரணிகளில் ஒன்றாக காடுகள் மரங்கள் அழிக்கைப்பட்டமையே காரணமாகும் . ஆகவே அதன் தாக்கத்தை குறைப்பதற்கு மரநடுகை செயற்றிட்டத்தை நடைமுறைபடுத்துவது ஒரு சிறப்பம்சமாகும் .
இந்நிகழ்வினை வாமதேவ புரம் இந்து ஆலயத்தில் நடை முறைபடுத்துவதானது ஒரு சமய நல்லிணக்க செயற்பாட்டை காட்டுவதோடு மக்கள் மத்தியில் ஒரு சிறந்த விழிப்புணர்வை வழங்குவதாகவும் அமைகின்றது என்று கூறி தனது உரையை நிறைவு செய்தனர்.
அதனை தொடர்ந்து சர்வமத தலைவர்கள் சர்வ மத குழு உறுப்பினர்கள் கிராம அலுவலர் என தனித்தனியாக மரக்கன்றுகளை நாட்டினர்.
பின்பு சர்வமத தலைவர்கள் இணைந்து முன்பள்ளி சிறுவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி அவர்களும் சிறுவயதில் இருந்து மரம் நட வேண்டும் என்ற கருவை வழங்கினர்.
கறிற்றாஸ்-வாழ்வுதயத்தின் சர்வமத செயற்றிட்டத்தின் கீழ் மரநடுகை ஆரம்பித்து வைப்பு.
Reviewed by Author
on
September 09, 2022
Rating:

No comments:
Post a Comment