ஆசிய கோப்பையை கைப்பற்றியது இலங்கை அணி
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்க 21 பந்துகளில் 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
தனஞ்சய டி சில்வா 28 ஓட்டங்கள்.
பந்து வீச்சில் ஹரிஷ் ரஹூப் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
நஷீம் ஷா, சதாப் கான் மற்றும் இப்திகர் அஹமட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் பெற்றுக் கொண்டனர்.
அதன்படி, 171 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் மொஹமட் ரிஷ்வான் அதிகபட்சமாக 55 ஓட்டங்களையும் இப்திகர் அஹமட் 32 ஓடட்ங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் பிரமோத் மதுஷான் 4 விக்கெட்டுக்களையும் மற்றும் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.
சாமிக்க கருணாரத்ன 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அதன்படி, ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி 6 முறையாகவும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இதேவேளை ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி இவ்வாறு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
"ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சாதனை வெற்றியை தொடர்ந்து எங்களின் கிரிக்கெட் அணி இலங்கையின் நற்பெயரை சர்வதேச அளவில் உயர்த்தியுள்ளது.
இந்த அனைத்து வெற்றிகளும் தலைமை மற்றும் அணியின் மற்ற வீரர்களின் ஒற்றுமை மற்றும் மகத்தான அர்ப்பணிப்பால் சாத்தியமானது.
இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பயிற்சியாளர்கள், முகாமைத்துவம் மற்றும் நிர்வாகத்திற்கு நன்றி.
இலங்கை எதிர்நோக்கும் சவாலான சூழ்நிலையிலும் தாய்நாட்டுக்கு வெற்றி கிடைக்கும் வரை அனைவரும் செய்த பொதுவான அர்ப்பணிப்பு கிரிக்கெட் உலகிற்கு மட்டுமன்றி ஏனைய துறைகளில் இரண்டாம் தலைமுறையினருக்கும் சிறந்த முன்னுதாரணமாகும்."
ஆசிய கோப்பையை கைப்பற்றியது இலங்கை அணி
Reviewed by Author
on
September 12, 2022
Rating:
Reviewed by Author
on
September 12, 2022
Rating:




No comments:
Post a Comment