பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற தெரு நாய்
7 மாத குழந்தையை தெருநாய் கடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ, உத்தரபிரதேசம் – டெல்லி அமைந்துள்ள நகரம் நொய்டா. அந்நகரில் செக்டார் 100 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று கட்டிடவேலை நடைபெற்றது. அங்கு கட்டிட தொழிலாளிகளான தம்பதி தங்கள் 7 மாத கைக்குழந்தையுடன் வேலைக்கு வந்துள்ளனர். தம்பதி தங்கள் குழந்தையை கட்டிட பணிகள் நடைபெறும் பகுதிக்கு அருகே வைத்துவிட்டு கட்டிட வேலை செய்துவந்தனர். அப்போது, அந்த குடியிருப்பு பகுதிக்குள் வந்த தெருநாய், தனியாக இருந்த அந்த 7 மாத கைக்குழந்தையை கடித்து குதறியுள்ளது. தெருநாய் கடித்து குதறியதில் பச்சிளம் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட கட்டிட தொழிலாளிகளான பெற்றோர், விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது, குழந்தையை தெருநாய் கடித்து குதறுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், தெருநாயிடமிருந்து குழந்தையை மீட்ட பெற்றோர், குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கபப்ட்டது. ஆனால், தெருநாய் கடித்து குதறியதில் பலத்த காயமடைந்த பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 7 மாத பச்சிளம் குழந்தையை தெருநாய் கடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற தெரு நாய்
Reviewed by Author
on
October 18, 2022
Rating:
Reviewed by Author
on
October 18, 2022
Rating:


No comments:
Post a Comment