அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இடம்பெற்ற இரத்ததான முகாம்

மன்னாரில் பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட அவசர இரத்த தேவையைக் கருத்தில் கொண்டு மீண்டும் ஒருமுறை எம் மண்ணின் மக்களின் உயிர்காக்கும் மானுடப்பணியில் #சிறகுகள், மன்னார் பொறியியலாளர் சங்கத்தினருடன் இணைந்து கடந்த  வியாழக்கிழமை (06/10/2022) மன்னார் பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் "உதிரம் கொடுப்போம் உயிர்கள் காப்போம்" என்ற தொனிப்பொருளில் இரத்ததான முகாம் ஒன்றினை நடாத்தியிருந்தது. அதில் பல அமைப்புக்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இணைந்து இவ் உயிர்காக்கும் முயற்சிக்கு தங்களின் குருதித்தானத்தினை வழங்கியிருந்தார்கள். 

குறிப்பாக பல இளைஞர் யுவதிகள் தாமாக முன்வந்து தங்களது கன்னி இரத்தானத்தினை ஆர்வத்துடன் மேற்கொண்டதும் சிரேஸ்ட குருதிக் கொடையாளி ஒருவர் தனது 63வது இரத்த தானத்தை வழங்கியிருந்ததுடன் அவர் தனது பிள்ளையை இரத்ததானம் வழங்க அழைத்து வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன்போது கொடையாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் வீட்டுத்தோட்டதை ஊக்குவிப்பதை நோக்காகக் கொண்டு பயன்தரும் பழக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. இவ் உயிர்காக்கும் புனிதப் பணியில் எமக்கு அனைத்துவிதமான ஆதருவகளையும் வழங்கிய மன்னார் #IESL நிறுவனம், VMCT நிறுவனம் மற்றும் மன்னார் இரத்த வங்கியின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எமது சிரம்தாழ்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.



















மன்னாரில் இடம்பெற்ற இரத்ததான முகாம் Reviewed by Author on October 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.