20/20 உலக கிண்ண தொடரிலிருந்து துஷ்மந்த சமீர நீக்கம்
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் வீரர் துஷ்மந்த சமீர, 2022 இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவரால் இந்த தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் – இலங்கை அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசிய துஷ்மந்த சமீர போட்டியின் இடைநடுவே உபாதைக்கு உள்ளானார்.
இதேவேளை பிரமோத் மதுசான் மற்றும் தனுஸ்க குணதிலக ஆகியோரின் உடல்நிலையும் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
20/20 உலக கிண்ண தொடரிலிருந்து துஷ்மந்த சமீர நீக்கம்
Reviewed by Author
on
October 19, 2022
Rating:

No comments:
Post a Comment