பெட்ரோலிய தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பு
பெட்ரோலிய தொழிற்சங்கத்தினர் இன்று(18) சுகயீன விடுமுறையில் சேவைக்கு சமூகமளிக்காதிருக்க தீர்மானித்துள்ளனர். பாராளுமன்றத்தில் இன்று(18) சமர்ப்பிக்கப்படவுள்ள பெட்ரோலிய உற்பத்தி விசேட கட்டளைகளுக்கான திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக பெட்ரோலிய விநியோக செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என பெட்ரோலிய தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர், கலாநிதி அசோக ரன்வல தெரிவித்தார்.
பெட்ரோலிய தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பு
Reviewed by Author
on
October 18, 2022
Rating:

No comments:
Post a Comment