ரயிலில் தள்ளிவிட்டு மாணவி படுகொலை; தந்தை மாரடைப்பால் மரணம்
நடந்தது என்ன? சென்னை ஆதம்பாக்கம் ராஜா தெரு, காவலர் குடியிருப்பில் வசிப்பவர் மாணிக்கம்(47). கால் டாக்ஸி ஓட்டுநர். இவரது மனைவி ராமலட்சுமி(43) ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இவர்களுக்கு சத்யா (20) என்ற மகள் இருந்தார். இவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தயாளன் என்பவரும் ஆதம்பாக்கம் ராஜா தெருவில் வசித்து வந்தார். இவரது மகன் சதீஷ்(23), சென்னை விமான நிலையத்தில் கார்கோ பிரிவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சத்யாவும் சதீஷும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சிலமாதங்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
மாணவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சதீஷை போலீஸார் ஈசிஆர் பகுதியில் கைது செய்தனர். சதீஷைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஈசிஆர் பகுதியில் சுற்றித் திரிந்த அந்த நபரை போலீஸார் கைது செய்தனர்
.
.
ரயிலில் தள்ளிவிட்டு மாணவி படுகொலை; தந்தை மாரடைப்பால் மரணம்
Reviewed by Author
on
October 14, 2022
Rating:

No comments:
Post a Comment