அண்மைய செய்திகள்

recent
-

பார்வையற்றோரின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாக அதிகரித்துள்ளது

பார்வையிழப்பினால் பாதிக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் பார்வையை மீளப் பெறும் திறன் கொண்டுள்ளனர், ஆனால் அதற்குத் தேவையான சத்திரசிகிச்சைகளைச் செய்வதற்கான வசதிகள் இல்லை என கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் எம்.டி.எஸ். குணதிலக்க தெரிவித்தார். சத்திரசிகிச்சைக்கு தேவையான contact lenses, தடுப்பூசிகள் மற்றும் இதர சத்திரசிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு கண் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் கண் சத்திரசிகிச்சைகளுக்கு பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்ட லென்ஸ்கள் மற்றும் மருந்துகளே தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலைமையால் கண் சத்திரசிகிச்சைகள் தாமதமானதுடன் தேசிய வைத்தியசாலையில் இம்மாதம் மாத்திரம் கண் சத்திரசிகிச்சைக்காக சுமார் 500 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். தற்போதைய டொலர் நெருக்கடி காரணமாக இலங்கைக்கு contact lenses இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, கண் வைத்தியசாலைக்கு மருந்துகள் மற்றும் லென்ஸ்கள் வழங்குபவர்களுக்கு அதற்கான வாய்ப்பு இருப்பதாக தேசிய கண் வைத்தியசாலை தெரிவிக்கின்றது. தற்போது பார்வையற்றோரின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாக அதிகரித்துள்ளது.

பார்வையற்றோரின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாக அதிகரித்துள்ளது Reviewed by Author on October 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.