கெப்பித்திகொல்லாவ அமைதியின்மையின் போது தாக்குதலுக்குள்ளான பொலிஸ் சார்ஜன் உயிரிழப்பு
கெப்பித்திக்கொல்லாவ பகுதியில் காட்டு யானை தாக்கி நேற்று(31) மாலை ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய, கெப்பித்திக்கொல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
இதன்போது ஒன்றுதிரண்ட மக்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.
தாக்குதலுக்கு இலக்காகிய பொலிஸ் அதிகாரியை மீட்பதற்காகவே வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கெப்பித்திகொல்லாவ அமைதியின்மையின் போது தாக்குதலுக்குள்ளான பொலிஸ் சார்ஜன் உயிரிழப்பு
Reviewed by Author
on
November 01, 2022
Rating:
Reviewed by Author
on
November 01, 2022
Rating:


No comments:
Post a Comment