கொங்கோவில் நடந்த இசைக்கச்சேரி; கூட்ட நெரிசலில் சிக்கி 11 போ் பலி
80 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட மைதானத்தில் அதற்கும் அதிகமாக கூட்டம் திரண்டது. ரசிகர்கள் பலர் விஐபி இருக்கைகள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்குச் சென்று அமர முற்பட்டனர். அவர்களை பொலிஸார் தடுத்தனர். ஆனால் அதை மீறியும் ரசிகர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு முன்னேறிச் சென்றனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 2 பொலிஸார் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் கொங்கோவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொங்கோவில் நடந்த இசைக்கச்சேரி; கூட்ட நெரிசலில் சிக்கி 11 போ் பலி
Reviewed by Author
on
November 01, 2022
Rating:

No comments:
Post a Comment