மன்னார் எருக்கலம் பிட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட 75 வீடுகள் வைபவ ரீதியாக பயனாளிகளிடம் கையளிப்பு.
யுத்தத்திற்கு பிற்பாடு மீளக் குடியேறியுள்ள மக்களுக்கு வீட்டுத் திட்டமானது பூரணத்துவம் அடையாத நிலையில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களின் கோரிக்கைக்கு அமைய குவைத் நாட்டின் ஸகாத் ஹவுஸின் ((Zakath House) ) நிதியுதவியுடன் ISRC நிறுவனத்தின் அனுசரணையில் எருக்கலம்பிட்டி ஸகாத் பவுண்டேசனின் (Zakath Foundation) பூரண ஒத்துழைப்புடன் மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டி கிராமத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள 200 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்ட செயற்றிட்டத்திற்கு அமைய முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 75 வீடுகளை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிதிகள் இணைந்து உத்தியோகப்பூர்வமாக பயனாளிகளுக்கு கையளித்தனர்.
தலா 13 லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த வீடுகளை பயனாளிகளுக்கு கையளித்து வைக்கும் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் , தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர் ஆர். சூரிய ஆராய்ச்சி, மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப், ISRC நிறுவனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான ஏ.மிஹ்லார்,குவைட் நாட்டின் இலங்கைக்கான தூதுவரின் இணைப்பாளர்,மன்னார் பிரதேச சபைத் தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் எருக்கலம் பிட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட 75 வீடுகள் வைபவ ரீதியாக பயனாளிகளிடம் கையளிப்பு.
Reviewed by Author
on
November 06, 2022
Rating:

No comments:
Post a Comment