அண்மைய செய்திகள்

recent
-

மார்ச் 20ஆம் திகதியளவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் – தேர்கள் ஆணைக்குழு

அடுத்த வருடம் மார்ச் 20ஆம் திகதியளவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி, புதிய உறுப்பினர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதியாகும் போது, உள்ளூராட்சி மன்ற சபைகளுக்கான புதிய அமர்வுகளை ஆரம்பிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க குறிப்பிட்டார். அதற்கு தேவையான சட்ட ரீதியான அதிகாரங்கள் தம்மிடம் காணப்படுவதாக அவர் கூறினார். 

 உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் ஊடாக தேர்தலை மார்ச் மாதம் 20ஆம் திகதி நடத்த முடியாத நிலைமை காணப்படுவதாக பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகின்றன. இதனிடையே, எல்லை நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் ஊடாக தேர்தலை மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். நாட்டில் 341 உள்ளூராட்சி மன்றங்கள் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


மார்ச் 20ஆம் திகதியளவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் – தேர்கள் ஆணைக்குழு Reviewed by Author on November 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.