இரு தரப்புக்கு இடையே தனிப்பட்ட மோதல் - ஒருவா் பலி!
சம்பவத்தில் அதே கிராமத்தை சோ்ந்த புஸ்பராசா நிஷாந்தன் (வயது29) என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
எனினும் தனக்கு எதுவுமில்லை எனவும், தான் வைத்தியசாலையிலிருந்து சுயவிருப்பில் வெளியேறுவதாகவும் எழுதிக் கொடுத்துவிட்டு வீடு திரும்பியவா் வீட்டிற்கு சென்றதும் இரத்தமாக வாந்தி எடுத்துள்ளாா்.
பின்னா் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிாிழந்துள்ளாா்.
தலையில் பலமாக தாக்கியதாலேயே அவா் உயிாிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடா்புடைய சந்தேகத்தில் 17 வயதான ஒருவரும், 25 வயதான ஒருவரும் இளவாலை பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களில் 17 வயதான நபரே மேற்படி தாக்குதல் மற்றும் கொலை சம்பவத்துடன் தொடா்புடைய பிரதான சந்தேகநபா் என பொலிஸாா் கூறியுள்ளனா்.
சம்பவம் தொடா்பாக மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸாா் மேற்கொண்டுள்ளனா்.
இரு தரப்புக்கு இடையே தனிப்பட்ட மோதல் - ஒருவா் பலி!
Reviewed by Author
on
January 28, 2023
Rating:

No comments:
Post a Comment