அண்மைய செய்திகள்

recent
-

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவு

 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் மாணவர்களிடையே ஏற்படக்கூடிய வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றைத் திட்டமிட்டுள்ளனர்.

 

கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று (26) நிறைவடையவுள்ளது. 

 

கடந்த காலங்களிலும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், பரீட்சை முடிந்த பின்னர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் போக்கு காணப்பட்டதாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

அதற்கமைய, பெற்றோர்களும் தமது பிள்ளைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி இவ்வாறான நிலைமைகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.






க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவு Reviewed by Vijithan on February 26, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.