அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச ஈரநில தினத்தை முன்னிட்டு மன்னாரில் பறவைகள் கண்காணிப்பகம் திறந்து வைப்பு

மன்னார் மாவட்டத்தில் உள்ள கோரைகுளம் பகுதிக்கு ஆண்டு தோறும் பல ஆயிரக்கனக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுபறவைகள் வருகை தருவதன் அடிப்படையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்த பறவைகளை பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்ட பறவைகள் கண்காணிப்பகம் நேற்று (26) வியாழக்கிழமை வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் கொழும்பு பல்கலைகழகம் மற்றும் பெண்கள் மேம்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் “வேல்ட் ஓரியன் கிளப்” மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையில் பறவைகள் மற்றும் ஈரநிலம் தொடர்பாக பணியாற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்பில் குறித்த கண்காணிப்பகம் அமைக்கப்பட்டு வைபவரீதியாக பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கையளிக்கப்பட்டது 

 குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல் மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப் பேராதனை பல்கலைகழக தாவர அறிவியல் பேரசிரியர் நிமல் குணதிலக, மழைக்காடுகள் தொடர்பான பேராசிரியர் சவத்திரி குணதிலக, பறவைகள் ஆய்வு பேராசிரியர் சம்பத் செனவிரெட்ன மற்றும் கயோமினி ,பெண்கள் மேம்பாட்டு பேரவை மாவட்ட இணைப்பாளர் ரெபேக்க மெராண்ட ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட அமைப்பின் பிரதிநிதிகள்,கல்வி திணைக்கள அதிகாரிகள்,கடற்படை உயர் அதிகாரிகள்,விவசாய திணைக்கள உத்தியோகஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் குறித்த நிகழ்வின் இறுதியில் ஈரநிலங்களின் முக்கியத்துவம் மற்றும் மன்னார் நோக்கி இடம்பெயரும் வெளிநாட்டு பறவைகள் எதிர் கொள்ளும் சவால்கள் தொடர்பான தெளிவுபடுத்தலும் வழங்கப்பட்டது 

 அதே நேரம் மன்னார் மாவட்டத்தை மையப்படுத்து உருவாக்கப்பட்டுள்ள பறவைகள் கழகத்தின் அங்குரார்பணமும் இடம் பெற்றதுடன் அக் கழகத்துக்கு தேவையான தொலைநோக்கி உள்ளடங்களான தொழில்நுட்ப கருவிகளும், புத்தகங்களும் வழங்கிவைக்கப்படமை குறிப்பிடதக்கது











சர்வதேச ஈரநில தினத்தை முன்னிட்டு மன்னாரில் பறவைகள் கண்காணிப்பகம் திறந்து வைப்பு Reviewed by Author on January 27, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.