பொலிவிய பெண் 230 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைனுடன் கைது
பொலிவிய நாட்டு பெண் ஒருவர் 4 கிலோ 631 கிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும், சுங்க திணைக்களத்தினரும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண் துணிகளுக்குள்ளும் பைக்குள்ளும் சூட்சுமமான முறையில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.
 அவர் பிரேசிலில் இருந்து துபாய் வழியாக எமிரேட்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் EK 650 விமானத்தில் நாட்டிற்கு வந்துள்ளார்.
26 வயதான அப்பெண்ணுக்கு இது முதல் வெளிநாட்டுப் பயணம் என இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
 
அவர் கொண்டு வந்த போதைப்பொருள் சுமார் 230 மில்லியன் ரூபா பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது. 
பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் உதவியுடன் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் சுங்க அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
பொலிவிய பெண் 230 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைனுடன் கைது
 Reviewed by Author
        on 
        
February 28, 2023
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 28, 2023
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
February 28, 2023
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 28, 2023
 
        Rating: 

 
 
 

 
 
 
 
.jpg) 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment