ஏர் நிலம்”அமைப்பின் ஊடாக வகுப்பறைகூடம் கையளிப்பு…..
சுவிஸ் இறெயின்தாளர் தமிழ்மன்றத்தின் நிதியுதவியில் “ஏர் நிலம்”அமைப்பின் ஊடாக புனர்நிமாணம் மேற்கொள்ளப்ப்பட்ட வகுப்பறை கூடம் வைபவ ரீதியாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(31) வைபவரீதியா திறந்து வைக்கப்பட்டு பாடசாலை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கபட்டது
மன்னார் துள்ளுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக ஏர் நிலம் அமைப்பின் ஒழுங்கமைப்பில் சுவிஸ் இறெயின்தாளர் தமிழ் மன்றம் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட குறித்த வகுப்பறை மேற்படி வைபவ ரீதியா திறந்து வைக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் மன்னார் வலய கோட்டகல்வி பணிப்பாளர் சந்தியோகு துள்ளுக்குடியிருப்பு பாடசாலை அதிபர் ராஜன் குரூஸ் ஏர்நிலம் அமைப்பின் கிளிநொச்சி செயலாற்றுனர் லக்சிகன் ஏர்நில அமைப்பின் மன்னார் மாவட்ட செயலாற்றுனர்கள் பெனில் துள்ளுக்குடியிருப்பு சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
குறித்த நிக்ழவின் இறுதியில் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவும் ஏர்நில அமைப்பினரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
ஏர் நிலம்”அமைப்பின் ஊடாக வகுப்பறைகூடம் கையளிப்பு…..
Reviewed by NEWMANNAR
on
March 31, 2023
Rating:

No comments:
Post a Comment