நெற் செய்கையாளர்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்க 36 ஆயிரம் மெட்ரிக் தொன் உரம் விவசாய அமைச்சிடம் கையளிப்பு!
உரத்தை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் , 'விவசாயிகளின் அரிசி உற்பத்தியை அதிகரித்து , நாட்டின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய கடுமையான முயற்சி செய்யும் இந்த சந்தர்ப்பத்தில் 45 000 தொன்னுக்கும் அதிக உரம் கொண்டு வரப்பட்டுள்ளது.
75 ஆண்டுகளாக முன்னேற்றத்திலும் , நெருக்கடியின் ஊடாகவும் இலங்கை மக்களுக்கு ஆதரவாக அமெரிக்க மக்கள் நின்றுள்ளதோடு , எங்களின் நல்லெண்ணத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளோம் என்றார்.
அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து வெளியிடுகையில் ,
இந்த உதவியின் மூலம் எதிர்வரும் அறுவடைப் பருவங்களில் விளைச்சல் சீராக மேம்படும் என்று நம்புகின்றோம். அரிசி இறக்குமதியில் தங்கியிருப்பதை குறைத்து , இலங்கை நெல் விவசாயிகளை மேலும் வலுவூட்டுவதே எமது இறுதி நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.
நெற் செய்கையாளர்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்க 36 ஆயிரம் மெட்ரிக் தொன் உரம் விவசாய அமைச்சிடம் கையளிப்பு!
Reviewed by Author
on
March 20, 2023
Rating:

No comments:
Post a Comment