மாணவர்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் விபத்து
இதன்போது குறித்த வாகனத்தின் பின்னாள் அமைக்கப்பட்ட பாதுகாப்பு கூடாரம் வாகனத்தை விட்டு அகன்றபோது மாணவர்களும் வீதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர். இதன்போது குறித்த வாகனத்தில் பயணித்த 11 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நால்வர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்ற வருகின்றனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த 11 மாணவர்களும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் பளை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை குறித்த வாகனத்தை செலுத்திய சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் விபத்து
Reviewed by Author
on
March 03, 2023
Rating:

No comments:
Post a Comment