இலங்கையில் தங்கத்தின் விலை பாரியளவில் வீழ்ச்சி!
இந் நாட்டில் தங்கத்தின் விலை வேகமாக சரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (09) காலை கொழும்பு செட்டித் தெரு தங்கச் சந்தையில் 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 145,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 134,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இம்மாத ஆரம்பத்தில் கொழும்பு செட்டித் தெரு தங்கச் சந்தையில் 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 184,000 ரூபாவாகவும், 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 170,000 ரூபாவாகவும் பதிவாகியிருந்தன.
இந்த ஆண்டின் அதிகபட்ச தங்க விலை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பதிவாகி இருந்தது.
24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 193,000 ரூபாவாகும், 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 178,500 ரூபாவாகும் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தங்கத்தின் விலை பாரியளவில் வீழ்ச்சி!
Reviewed by Author
on
March 09, 2023
Rating:
Reviewed by Author
on
March 09, 2023
Rating:


No comments:
Post a Comment