பாடசாலை மாணவர்கள் இடைவிலகல் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு அமர்வு -Photos
Chrysalis நிறுவனத்தின் Transform திட்ட நிதி உதவியுடன் மடு வலய கல்வி பணிமனைக்குட்பட்ட முள்ளிக்குளம் GTMS & இரணை இலுப்பைக்குளம் ஆகிய பாடசாலைகளில் "பாடசாலை மாணவர்களின் வரவினை மேம்படுத்துதல்" தொடர்பாக பெண்தலைவர்கள் முன்னெடுக்கம் செயல் திட்டம் இடம் பெற்றது அதே நேரம் பாடசாலை மாணவர்களுன் கல்வியை ஊக்குவிக்கும் ஆலோசனைகளும் மற்றும் அரச அதிகாரிகள் மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது !
இந்த நிகழ்வில் Chrysalis நிறுவன அணி தலைவர் ஜோகான்சன்,அரச அதிகாரிகள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்.
மேலும் இந்த பகுதியில் பாடசாலை இடைவிலகல் ஏற்படவும் மாணவர்கள் கல்வி நிலை பாதிக்கப்படுவதற்கும் சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாமையே அதிக காரணமாக உள்ளமை இப்பகுதியில் பெண்தலைவிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின்போது அதிகளவான பெற்றோர்கள் மாணவர்களால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
பாடசாலை மாணவர்கள் இடைவிலகல் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு அமர்வு -Photos
Reviewed by NEWMANNAR
on
March 28, 2023
Rating:

No comments:
Post a Comment