கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் ஆசிரியை கொலை
பாலர் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த இளம் ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேராதனை, கொப்பேகடுவ, கினிஹேன பிரதேசத்தில் வீதியொன்றில் வைத்து குறித்த 25 வயதுடைய ஆசிரியர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முருதலாவ பகுதியை சேர்ந்த அஞ்சலி சாபா என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாலர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்குபற்றச் சென்ற போதே அவர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
சடலம் இலுக்தென்ன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.m
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் ஆசிரியை கொலை
Reviewed by NEWMANNAR
on
April 07, 2023
Rating:

No comments:
Post a Comment