சிவபூமி மன்னார் அருள்மிகு கெளரி அம்மை உடனுறை திருக்கேதீச்சரநாதருக்கு திருக்கொடியேற்றப் பெருவிழா-2023
சிவபூமி மன்னார் அருள்மிகு கெளரி அம்மை உடனுறை திருக்கேதீச்சரநாதருக்கு வைகாசித் திங்கள் 10ம் நாள் (மே 24) திருக்கொடியேற்றப் பெருவிழா-2023
வரலாற்றுப் பெருமை மிக்க, தேவாரப் பாடல் கிடைக்கப்பெற்ற, மிகவும் பழமையான, படவேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேலே திடமாக உறைகின்ற திருக்கேதீச்சரநாதனின் ஆண்டுப் பெருந்திருவிழா இம்முறை வைகாசித் திங்கள் வளர்பிறை 10ம் நாள் (மே 24) ஆரம்பமாகிறது. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், இம்முறை மிகவும் சிறப்பாக, புத்தெழில் பொங்க நடைபெறவுள்ளது. வைகாசித் திங்கள் வளர்பிறை 18ம் நாள் (யூன் 1) வியாழக்கிழமை ஐந்து திருத்தேர் வீதியுலா நிகழ்வும் நடைபெறவுள்ளது. அடியவர்கள் அனைவரும் பெருமளவில் வந்து, பலாவியில் நீராடி பாவங்களைக் கழுவி பெருந்திருவிழாக் கண்டு மண்ணில் நல்லவண்ணம் வாழ வேண்டிக்கொள்கிறோம்
திருக்கேதீச்சரத்தில் பெருமளவான திருவிழா பங்களிப்பாளர்கள், சிவபூமி இலங்கையின் சைவ பாடசாலைகளே ஆகும். மாணவர்களை சிவவழிபாட்டில் ஈடுபடுத்த எங்கள் முன்னோர்கள் வகுத்த வழிமுறைகளின் வெளிப்பாடே இதுவாகும்.

No comments:
Post a Comment