அண்மைய செய்திகள்

recent
-

ஈழத்தமிழன் அமெரிக்கா விண்வெளி ஆய்வில் சாதனை !

 ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார். போருக்குள் பிறந்து, வளர்ந்து தாய் நிலத்தில் இருந்து அகதியாக தத்தளித்துச் சென்ற இந்த மாணவனின் சாதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் மேனகா தம்பதிகளின் மகனான அர்ச்சிகன் அமெரிக்காவில் உள்ள விண்வெளி குறித்த நிறுவனமான National Space Society (NSS) சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே நடாத்திய போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்களை உள்ளடக்கி, அவரது சிந்தனையில் உருவான செயற்றிட்டம் வெற்றி பெற்றுள்ளதாக NATIONAL SPACE SOCIETY (NSS) அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 19 நாடுகளில் இருந்து 26725 பங்கேற்ற நிலையில், ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் அர்ச்சிகன் அனுப்பிய செயற்றிட்டத்தை NSS அங்கீகரித்து அவரை வெற்றியாளராக அறிவித்துள்ளது.

அது மட்டும் அன்றி அமெரிக்காவில் உள்ள Texas மாநிலத்தில் NSS அமைப்பின் தலைமையில் இந்த மாதம் இடம்பெறும் அறிவியல் மாநாட்டிற்கும் அவர் அழைக்கப் பட்டிருப்பதுடன் அங்கு உரையாற்றும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார்.

குறித்த மாணவன் தாயகத்திலிருந்து தனது பெற்றோருடன் அனைத்தையும் இழந்து அகதியாக இந்தியாவிலே தஞ்சமடைந்திருந்தார். இந்நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து அர்ச்சிகனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.


ஈழத்தமிழன் அமெரிக்கா விண்வெளி ஆய்வில் சாதனை ! Reviewed by NEWMANNAR on May 25, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.