மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்.
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று புதன் புதன் கிழமை (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இதன் போது உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் பூஜைகள் இடம் பெற்றது.அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி வலம் வந்து கொடித் தம்ப பூஜை இடம் பெற்று அதனை தொடர்ந்து கொடி தாம்பத்திற்கு அபிஷேகம் செய்து ஆராதனைகள் இடம்பெற்றது.
பின்னர் சுப வேளையில் கொடியேற்றம் இடம் பெற்றது.
திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம் பெற்றது.
இதன் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 1 ஆம் திகதி தேர் திருவிழாவும் 2 ஆம் திகதி தீர்த்த திரு விழாவும் இடம்பெறும்.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 10 நாட்கள் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்.
Reviewed by NEWMANNAR
on
May 24, 2023
Rating:

No comments:
Post a Comment